ஜெனிவா அமர்வு இலங்கைக்கு சவாலாக அமையாது:பிரதமர் உறுதி

ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், பிரதமரும் அதையொத்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்ககையில்,”ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை அரசு சமர்ப்பிக்கும்.
இந்த மாநாடு இலங்கைக்கு சவாலாக அமையாது என்றே நாம் கருதுகின்றோம்.

இலங்கை தொடர்பில் என்ன பிரேரணை வந்தாலும் அதனை அரசு எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது”என கூறியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!