இலங்கையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கை உட்பட பல நாடுகளில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களைஅகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தெஸ்ஸா லியோன்ஸ் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட கலவரங்களின் பின்னால் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பதிவுகளே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில நாட்கள் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே முகப்புத்தகத்தினூடு இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்கள் பரவாமல் இருக்க அவ்வாறான பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!