3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு: – அதிர வைக்கும் மத்திய அரசின் தகவல்

நாடு முழுவதும் மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள பதிலில் இந்தியா முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டில் 36,735 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 34,651பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 38,947பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 3,29,000 வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த புள்ளி விவரம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!