பிரித்தானிய ராணியார் காலமானார்: சோகத்தில் மூழ்கிய பிரித்தானியா!

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல்நிலை குன்றியதை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது 96வது வயதில் காலமாகியுள்ளார். குறித்த வருத்தமான செய்தியை பக்கிங்ஹாம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
   
பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட காலம் அரச பொறுப்பில் இருந்த ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை அடுத்து அவரது மகன் இளவரசர் சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராக உள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனை இன்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ராணியார் இன்று பிற்பகல் பால்மோரலில் இறுதி நித்திரை கொண்டார் என குறிப்பிட்டுள்ளது.ராணியாரின் உட நிலை தொடர்பில் மருத்துவர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் உடனடியாக பால்மோரால் அரண்மனைக்கு விரைந்தனர்.

நாட்டுக்கு சேவையாற்றுவதே தமது முதன்மையான பணி என கூறி வந்துள்ள ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது கணவர் இளவரசர் பிலிப் மறைந்த நான்காவது நாள் பணிக்கு திரும்பியிருந்தார்.
கடந்த 2021 ஏப்ரல் மாதம் உடல் நலம் குன்றியதை அடுத்து இளவரசர் பிலிப் மரணமடைந்திருந்தார். கடந்த ஜூன் மாதத்தில் தான் ராணியார் இரண்டாம் மெலிசபெத் அரச பொறுப்புக்கு வந்து 70 ஆண்டுகளை நிறைவு செய்து பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!