அமைச்சு பதவியை பொறுப்பேற்று ஒரு மணித்தியாலத்தில் பதவியை நிராகரித்த உறுப்பினர்

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பதவியை நிராகரித்த உறுப்பினர்

அதற்கமைய, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்கவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்தவும் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!