உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பரிமாற்றம் – வங்கி கணக்குகள் பரிசோதனை

உண்டியல் மற்றும் ஹவாலா ஆகிய சட்டவிரோத முறைகளின் மூலம் இரண்டு மாதங்களில் ஒன்பது கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள உண்டியல் மற்றும் ஹவாலா ஆகிய சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைமைகள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பண பரிமாற்றம்

மடகாஸ்கரில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் உண்டியல் கடத்தல்காரர்களால் இந்தப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதல் தலைமையில் விசேட குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!