ராணியாருடன் அடக்கம் செய்யப்படவிருக்கும் சிறப்பு நகை!

ராணியார் இரண்டாம் எலிசபெத் தமக்கு மிகவும் நெருக்கமான சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என்று அரச நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் புதன்கிழமை முதல் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த ராணியாரின் உடல் வைக்கப்பட உள்ளது. அவரது உடல் கிடத்தப்பட்டுள்ள பெட்டியானது பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரச குடும்பத்துக்கு சொந்தமான பொருட்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

ஆனால், ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என கணித்துள்ளார் Lisa Levinson. அது எதுவாக இருக்கும் என்பது அரண்மனை வட்டாரத்தில் இருந்து வெளியிடப்படலாம் அல்லது ரகசியம் காக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணியாரின் நிச்சயதார்த்த மோதிரமானது இனி இளவரசி ஆன் கைவசமிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ராணியாரின் தனிப்பட்ட நகைகள் சேகரிப்பில் 300 பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் 98 உடை ஊசிகள், 46 நெக்லஸ்கள், 34 ஜோடி காதணிகள், 15 மோதிரங்கள், 14 கைக்கடிகாரங்கள் மற்றும் ஐந்து பதக்கங்கள் உட்படும் என கூறுகின்றனர். ஆனால், இறுதிச்சடகுகள் முன்னெடுக்கபடும் வரையில், இந்த நான்கு நாட்களும் கொடிகளால் மட்டுமே அவரது பெட்டி புதைக்கப்பட்டிருக்கும்.

அத்துடன், ராணியாரின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கும், மேலும், இறையாண்மையின் கோளம் மற்றும் செங்கோல் உள்ளிட்டவையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை விண்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள ஜார்ஜ் VI மன்னர் நினைவு தேவாலயத்தில் ராணியார் நல்லடக்கம் செய்யப்படுவார். ராணியாருடன் அவரது கணவரின் உடல் மற்றும் ராணியாரின் தாயாரின் உடலும் ஒன்றாக அடக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!