தமிழ்ப் பண்பாட்டுத் தொட்டில்கள்

வடமாகாணத்துக்குச் சுற் றுலா நுழைவோராக வரும் நாதஸ்வர-தவில் கலைஞர்கள், ஈழத்துக் கோவில்களில் நாதஸ்வரம்,தவில் வாசித்து உழைக்கிறார்கள். சுற்றுலா நுழைவோர் விதிகளுக்குப் புறம்பாக நடக்கிறார்கள்.

வடமாகாண முதலமைச்சர் பொலிஸார் வழியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இதனைத் தடுப்பதன் மூலம் உள்ளூர்க் கலைஞர் கள் தொழில் வாய்ப்புப்பெற ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறான கோரிக்கை கொண்ட உரையை வட மாகாணசபை அமர்வு ஒன் றில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆற்றியதாகச் செய்தித்தாள்களில் படித்தேன்.

தமிழகத்துக்கும் ஈழத்துக் கும் இடையே பயணங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கின்றன.

1948இற்குப் பின்னரே நுழைவிசைவு பெற்று இருநாட்டவரும் ஒரு வர் மற்றவர் நாட்டுக்குப் பயணிக்கின்றனர்.

இருந்தாலும் நுழைவி சைவு பெறாத பயணங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

இலங்கைக்கு வருவோர் நான்கு வகையான நுழை விசைவுகள் பெறலாம்.

சுற்றுலா நுழைவிசைவு, தொழில் செய்யும் நுழை விசைவு, அரசப் பணி கல்வி நுழைவிசைவு, சிறப்பு நுழை விசைவு எதுவாயினும் ஆகக் கூடியது ஓராண்டுகால எல்லை கொண்டது.

தமிழகத்தில் இருந்து வருகின்ற 99மூ பயணிகள் சுற்றுலா நுழைவிசைவிலேயே வருகின்றனர். மிக மிகச் சிலரே ஏனைய நுழைவிசை வுகளைப் பெறுவர்.

2009இற்குப் பின்னர் தமிழகத்தின் நான்கு வானூ ர்தி முனையங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை முனையங்களில் இருந்து வருவோரில் சுற்றுலா நுழை விசைவில் வருவோரில் குரு விகள் என அழைக்கின்ற வணிகப்பொருள் காவுநரே பெருமளவினர். இவர்களுக் காகவே வானூர்தி நிறுவ னங்கள் பல சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கும்.

எந்த வொரு வானூர்தியிலும் 30-40மூ பயணிகள் குருவிகள். இந்திய-இலங்கை அரசு விதிகளுக்குள் இவர்கள் வணிகப்பொருள் காவுநராக வந்து போனாலும், சுங்க அலுவலர்களின் விதிகளு க்கு அப்பாலான ஒத்துழைப் பால் இலங்கை அரசின் அந்நியச் செலாவணி இழப் புகள் கணிசமானதாகும்.

தங்கக்கடத்தல், போதைப் பொருள் கடத்தலுக்குக் குரு விகளின் பங்களிப்புக் கணி சமானது. கறுப்புப்பண, வங்கி சாரா அந்நிய நாணய மாற்றலால், கடத்தலால் இல ங்கையின் பொருளாதார இழப்புச் சொல்லும் தரமன்று.

இந்தப் பாரிய இழப்பின் அளவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் இருந்து வரும் அறிவுசார், கலைசார், சமயம் சார் பயணிகள் சுற்றுலா நுழைவிசைவில் அங்குவந்து உழைத்துக் கொண்டுவரும் தொகை மிகச் சொற்பமே.

இலங்கை- இந்திய அரசு களுக்குக் குருவிகளின் இந் தப் போக்குவரவு நன்கு தெரி ந்தும் வாளாவிருப்பர். குருவி களைக் கட்டுக்குள் கொண்டு வரவிரும்பாத அரசுகள், அறிவுசார், கலைசார், சமயம்சார் பயணிகளைக் கட்டுக்குள் கொண்டுவர விரும்பாதது வியப்பல்ல.

ஆனாலும் இந்திய-இல ங்கை அரசுகளுக்குப் பெரும் தலையிடியாக இருப்பது தீவிர வாதிகளின் வன்முறை நோக் கிய பயணங்கள். பாகிஸ் தானிய தீவிரவாதிகள் இல ங்கை வந்து, இலங்கையர் ஒத்துழைப்புடன் இலங்கைக் கடவுச்சீட்டுப் பெற்று இந் தியாவுக்குள் நுழைவதே அர சுகளுக்குப் பெரும் தலை வலி.

இந்திய வானூர்தி முனை யங்கள் நான்கிலும் இத்த கையோரில் சிலர் கடந்த பத்துப்பதினைந்து ஆண்டு களாகக் கைதாகி வருகின்ற னர். பலர் கைதாகாமலே பயணித்து வருகின்றனர்.

தமிழரின் பண்பாட்டுத் தாயகங்கள் தமிழகமும் ஈழ முமே. வெற்றிகரமான பண் பாட்டுக் கொடுக்கல்- வாங் கலே இன்றைய தமிழ்ப்பண் பாட்டின் தொட்டிலும் தொடர்ச்சியும்.

தொட்டிலாகவோ, தொடர் ச்சியாகவோ இருக்கக்கூடாது என்ற அரசியல் பார்வையே 1948 முதலான நுழைவி சைவு நடைமுறை. 1950 முத லாகக் காரைநகரிலும் காங் கேசன் துறையிலும் கடற் படைத்தளங்கள், 1974 இன் எல்லைக்கோடு, கள்ளத் தோணிகள், கடத் தல்காரர், போராளிகள் எனக் காலத்துக்கேற்ப நுழைவிசை வற்ற பயணங்களுக்குக் குறைவே இல்லை.எங்கோ ஒரு பயணி, எங்கோ ஒரு படகு, ஏதோ ஒருபொருள், எந்த நேரமும் விதிகளைக் கடந்து கரைகளைக் கடக்கின்றன.

2009இற்குப் பின் பாரிய நுழைவுகள் தமிழக மீன வருடையன. கடற் படைத்தளங்களை அகற்று என ஊர் வலமும் போராட்டமுமாக இருந்த காலம் மாறியது.

தமிழக மீனவரைத் தடுங்கள் என்ற முழக்க ஊர்வலமும் போராட்டமும் தொடங்கின. அதற்காகக் கடற்படை வேண் டும் என்ற போராட்டமுமாய் கடற்படை முகாம்களை வர வேற்கும் போராட்ட களமா னதே.

பாரிய பொருளாதார இழப் புகளாகக் கருதும் குருவிகள் தொடர்கிறார்கள். கடத்தல் கள் தொடர்கின்றன. கறுப்புப் பணப்புழக்கம் பெருகுகிறது. வங்கியற்ற நாணயமாற்றுத் (அவாலா) தொடர்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதத் தின் தளமாக, பயிற்சிக்கள மாக இலங்கை தொடர்கி றது. இலங்கை மீன்வளம் வினாவிற்குரியதாகின்றது.

இவற்றைக் கேட்பாரில்லை, தடுப்பாரில்லை, அத் தகைய அவாலா, போதைப் பொருள் கடத்தல் வரவுகளே, பணங்களே இலங்கை அர சியலின் போக்கையும் தீர் மானிக்கின்றன.

இவற்றுக்கு மேலாகத் தமிழரிடையேயான அறிவு சார், கலைசார், சமயம்சார் பயணிகள் பொருளாதார இழப்பைக் கொணர்கிறார் களா? உள்ளூர்க் கலை வளர்ப்பைக் கெடுக்கிறார் களா? தவராசாவின் கோரிக்கை பொருத்தமானதா?

இன்றைய தமிழகத்தின் முன்னணி இலக்கியப் பேச் சாளருள் ஒருவர் இலங்கை யர். அடிக்கடி தமிழகம் பய ணிப்பவர்.

அங்கு அவர் வாங்கும் கணிசமான தொகை கள் எந்தக்கணக்கில் இலங் கையுள் வருகின்றன? தமிழகப் பேச்சாளர் இவரது வருகையை ஒருபோதும் எதிர்த்ததில்லை. அவர் எத்த கைய இந்திய நுழைவிசைவு பெறுகிறார்?

துளிர் விடும் இலங்கைப் பேச்சாளர் சிலர் அண்மை யில் மதுரை சென்றனரே? சுற்றுலா நுழைவிசைவில் சென்று வந்தனர். ஊதியம் பெற்று வந்தனர்.

வட்டுக்கோட்டைத் தவில் – நாதஸ்வரக் கலைஞர்கள் அண்மையில் பெங்க@ரி லும் ஐதராபாத்திலும் பாராட் டுப் பெறும் இசை நிகழ்ச்சி களை நடத்தினரே. எத்த கைய நுழைவிசைவில் இந் தியா சென்றனர்? இந்தியக் கலைஞரோ, அரசியல்வாதி களோ எதிர்த்தனரா? அவர் களின் ஊதியம் எவ்வகை யில் இலங்கைக்குள் வந் தது?

நேற்று வரை இந்திய நுழைவிசைவின்றி ஏதிலித் தகுதி கேட்டு ஈழத்தமிழர் கடல் கடந்தனரே? எந்த இந் திய அரசியல்வாதி எதிர்த்தார்?

சுற்றுலா நுழைவிசை வில் வரும் நூற்றுக்கணக்கான தமிழக அரிவுவெட்டி இயந்திர இயக்கிகள் தை,மாசி, பங்குனியில் ஈழமெங்கும் பணி புரியாவிடின் வயல்களில் அறுவடையாக நெல் குவிந்து அழியுமே?

குடமுழுக்குகள், சமயச் சடங்குகள், சமயப் பேரு ரைகள் நிகழ்த்தவரும் தமி ழகச் சைவ ஆன்மீகத்தார் எந்தவகை நுழைவிசைவில் வருகிறார்கள்? உழைப்பை எவ்வாறு எடுத்துச் செல்கி றார்கள்.

நற்செய்திக் கூட்டங்களை நிகழ்த்தவரும் தமிழகக் கிறி ஸ்தவப் பிரசாரகர்கள், சைவப் பண்பாட்டையே அழிக்கும் துடிப்புடன் எந்த நுழைவிசை வில் ஈழத்துள் வரு கிறார்கள்? உழை ப்பை எவ்வாறு எடுத்துச் செல்கி றார்கள்.

இதையெல்லாம் கேட்க, விதி மீறல்களைச் சுட் டிக்காட்ட வலுவில் லையோ?

ஈழத்துத் தவில் மேதை தட்சணா மூர்த்தி பற்றி அம் சன் குமார் தயா ரித்த ஆவணப் படத்துக்கும் 2016 இல் இந்திய தேசிய விருது கிடைத்த பொழுது எந்த நுழை விசைவில் தயா ரிப்பாளர் அங்கு சென்றார்.

திரைக்கலை மேதை பாலு மகே ந்திரா தன் வாழ் நாளில் பெரும்பகு தியைப் பயண ஆவ ணமின்றியே
கழித்தார்.

இந்தியா அவ ரைப் போற்ற வில்லையா? அகில இந்திய திரைப்படத் தேர்வுக் குழுவுக்கே தலை வராக்கி அழகு பார்த்ததே? அவர் மட்டக்களப்பாரல் லவா? அவருக்குப் பயண ஆவணம் பெறுவதில் என் முயற்சியும் தோல்வி கண்டதே?

கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட தோராயமாக 3 இலட்சத்து 50,000 ஈழத்தமி ழர் தமிழகத்தில் வாழவில் லையா? உழைக்கவில்லையா? வேலை வாய்ப்புப் பெறவில் லையா? தத்தம் மக்களை உயர ;நிலைக்குக் கொணரவில் லையா?

எந்தவகை நுழை விசை வில் இந்த ஏதிலிகள் தமிழ கத்தில் வாழ்கிறார்கள்.

கா.பொ.இரத்தினம், கம்ப வாரிதி இ.ஜெயராஜ், மறவன் புலவு க.சச்சிதானந்தன் ஆகி யோரைத் தமிழகம் அழை த்து முதன்மை விரு துகள் வழங்கிய பொழுது நுழை விசைவு வகையை யார் அறி வார்?
ஈழத்துத் தவில் நாதஸ் வரக் கலை வளர்ச்சிக்குத் தமிழகம் ஆற்றிய பங்களி ப்பை யார் சொல்லுகிறார் கள்? தமிழ்நாட்டுச் சின்ன மேளங்கள் வராத கோயில் விழாக்காலம் ஈழத்தில் எப் பொழுது குறைந்தது? எந்த வகை நுழைவிசைவு பெற்று அவர்கள் வந்தார்கள்?

தமிழகத்து இசை வேளா ளர் மரபினர் இலங்கையில் குடி அமர்ந்து வாழாத வர லாற்றுக்காலம் உண்டா? நாச்சிமார்கோயிலடியில் வாழ் ந்த தன் சொந்த பந்தங்களின் நிலையை என்னிடம் விசாரித் தறிபவர் கலைஞர் கருணாநிதி.

தமிழக ஈழ உறவுகளைக் குறைக்க, முடக்க, முறிக்க முயல்வோர் தமிழரின் அரசி யல் எதிரிகளா னால் எதிர் கொள்ள வழிகள் உண்டு. தமிழரே இந்த உற வுகளை உடைத்தெறிய எதி ரிகளின் துணையை நாடுகின்றனர்.

1970களில் சிறிமாவின் ஆட்சிக்காலத்தில் ஒரு சில தமிழ்ப்பேராசிரியர்கள், ஒரு சில தமிழ் எழுத்தாளர்கள், அரசுசார் அரசியல்வாதிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

அக்கால யாழ்.மாநகர முதல்வர், அவரின் நெருங் கிய அலுவலர்கள் இம் முய ற்சிகளுக்குத் துணை போயினர்.

ஈழத்தமிழ்த் தேசியத்தின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொள்வோர் தமிழ்ப்பண்பாட்டுத் தொட்டில்களின் கொடுக்கல்- வாங்கலைத் தடுக்கார். தமிழ கக்கலை வரவுகளைத் தடுக்கார். தமிழகத்தைப் பகைக்கும் எந்த ஒன்றிலும் ஈடுபடார்.

இந்தக் கண்ணோட்டத்தி லேயே வடமாகாண சபையி னரின் அணுகுமுறைகள் அமையுமாயின் ஈழத்
தமிழ்த் தேசியத்தின் வலிமை யான எதிர்காலம் ஒளிமயமா னதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!