“உறுப்பு தானத்தை கட்டாயமாக்கலாம்” – மருத்துவர்கள் கருத்து!

‘உறுப்பு தானம் செய்ய, உயிருடன் இருக்கும் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு அனுமதி வழங்குவதை விட, இறந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்வதை கட்டாயமாக்குவது பலன் தரும்’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.விவாதம்:உறுப்பு தானம் செய்ய, 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு சட்டத்தில் அனுமதி இல்லை. சில தவிர்க்க முடியாத சூழல்களில் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. உயிரிழந்த நிலையில், உறுப்பு தானம் செய்ய வயது தடை இல்லை.
  
இந்நிலையில், 17 வயது சிறுவன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கல்லீரல் செயலிழப்பால் உயிருக்கு போராடி வரும் தன் 43 வயது தந்தைக்கு தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு, 18 வயதுக்கு குறைவான நபர்கள் உறுப்பு தானம் செய்ய அனுமதிக்கலாமா என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள், ‘உயிருடன் உள்ள 18 வயதுக்கு குறைவானவர்களை உறுப்பு தானம் செய்ய அனுமதிக்க கூடாது’ என தெரிவித்தனர்.மாறாக, உயிரிழந்த நபர்களின் உறுப்புகள் வயது வித்தியாசம் இன்றி தானமாக வழங்கப்படுவதை கட்டாயமாக்கலாம் என்றும், அது நல்ல பலனை அளிக்கும் என்றும் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!