உத்தரபிரதேசத்தில் வாலிபர் வயிற்றில் இருந்து 62 ஸ்பூன்கள் அகற்றம் September 29, 2022 9:17 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உத்தரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. மருந்துகள் சாப்பிட்டும் வயிற்று வலி கொஞ்சம் கூட குறையாததால் அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏராளமான ஸ்பூன்கள் காணப்பட்டன. அந்த ஸ்பூன்களில் தலை, கைபிடிக்கும் பகுதிகள் மட்டுமே காணப்பட்டன. இதையடுத்து அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்த ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 62 ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் டாக்டர்களிடம் கூறும்போது, ‘எனக்கு பசிக்கும் நேரங்களில் உணவு கிடைக்காவிட்டால் ஸ்பூன்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதனால் எனது பசி தீர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது’ என்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…