இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக வருவதாக தெரியவந்துள்ளது. குறித்த வாகனங்கள் சுங்கத்தின் தெற்காசிய கொள்கலன் முற்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சட்டவிரோத இறக்குமதி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று அங்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் 90 சதவீதமானவை சட்டவிரோதமாக பாகங்கள் இறக்குமதி செய்து இணைக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. மேலும், இந்த வாகனங்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதால், அவை பவனைக்கு பொருத்தமற்றதாக துரு்பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!