பல்கலைக்கழகங்களில் மனித உரிமை மன்றங்கள்! பகிடிவதைக்கு தீர்வு

இலங்கையின் 17 பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமைகள் மன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (12.10.2022)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை செயற்பாட்டை தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் பகிடிவதைக்கு உள்ளாகும் மாணவர்கள் முன்வந்து அதுதொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் தங்கள் உயர்கல்வியை தொடர முடியாது என்ற அச்சத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் அவ்வாறு முறைப்பாடுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இலங்கையிலுள்ள மற்றுமொரு பல்கலைக்கழகமொன்றில் கற்பதற்கான வாய்ப்பு அல்லது அரசாங்கத்தின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் வெளிநாடொன்றில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

பகிடிவதையை தடுக்கும் நோக்கில் இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமைகள் மன்றங்களை அமைத்து, அதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும் வகையில் முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!