பெங்களூரில் இதய வடிவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள்!

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள சில டிராஃபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பால் மருத்துவமனை மற்றும் பெங்களூரு போக்குவரத்து போலீஸ் மற்றும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) ஆகியோர் இணைந்து உலக இதய தினத்தை நினைவுகூரும் முயற்சியாக இதயத்தின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இதய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் 15ம் மேற்பட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் இதய வடிவ சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இதய வடிவில் ஒளிரும் டிராஃபிக் சிக்னல்கள் அக்டோபர் 25-ம் தேதி வரை முக்கிய ட்ராபிக் சிக்னலில் உள்ள சிவப்பு விளக்குகள் இதய வடிவத்தில் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மணிப்பால் மருத்துவமனை தனது டிவிட்டர் பக்கத்தில், “#WorldHeartDay தினத்தில், பெங்களூரை ‘இதய ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவதற்கு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சிவப்பு சிக்னல் இதயத்தின் வடிவத்தில் இருப்பது, இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பும் ஆடியோ செய்திகள் மற்றும் அவசர சேவைகளை எளிதாக அணுகுவதற்கான QR குறியீடுகள் ஆகியவை அடங்கும் என்று பதிவிட்டுள்ளது. மேலும் அதுகுறித்த சில புகைப்படங்களையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதய வடிவிலான போக்குவரத்து விளக்குகளைத் தவிர, மணிப்பால் மருத்துவமனைகள் போக்குவரத்து சிக்னல்களுக்கு அருகில் QR குறியீடுகளை அமைத்துள்ளன. இது ஸ்கேன் செய்யும் போது நோயாளியை அவசர எண்ணுடன் இணைக்கும் மற்றும் ஒரே கிளிக்கில் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு திருப்பி விடப்படும்.
மருத்துவ உதவிக்காக பல இடங்களில் அழைக்கவும், சரிபார்க்கவும் முடியாத நிலையில் அவசர காலங்களில் ஒரு பொத்தானை அழுத்தினால் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!