புதிய ஹைப்ரிட் சூப்பர் கோவிட் கிருமியை உருவாக்கும் அமெரிக்க ஆய்வகம்: வெடித்த சர்ச்சை!

அமெரிக்க ஆய்வகம் ஒன்று ஹைப்ரிட் சூப்பர் கோவிட் கிருமியை உருவாக்கி நெருப்புடன் விளையாடியுள்ளதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த கிருமியை சோதனை மேற்கொண்டதில் 80% எலிகள் மரணமடைந்துள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவானது ஓமிக்ரான் மற்றும் அசல் வுஹான் கொரோனா மாதிரியையும் ஒன்றாக இணைத்து புதிய ஹைப்ரிட் சூப்பர் கோவிட் கிருமியை உருவாக்கியுள்ளனர்.

இதுபோன்ற ஒரு ஆய்வு காரணமாகவே, உலகம் மொத்தம் ஸ்தம்பித்துப்போன, தற்போதும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள முடியாத கொரோனா பெருந்தொற்று உருவானது என்ற உண்மையை மறந்து, இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஹைப்ரிட் சூப்பர் கோவிட் கிருமியை சோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் ஓமிக்ரான் தொற்றை எலிகளில் செலுத்தியுள்ளனர். அதில் லேசான அறிகுறிகளுடன் எலிகள் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

ஆனால் இரண்டாவது கட்டத்தில் புதிய ஹைப்ரிட் சூப்பர் கோவிட் கிருமியை எலிகளுக்கு செலுத்தியதில், 80% எலிகள் பலியாகியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, குறித்த புதிய தொற்றால் பாதிக்கப்பட்டால் 80% பேர்கள் மரணமடையலாம் என்றே சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, குறித்த ஹைப்ரிட் சூப்பர் கோவிட் கிருமி தொடர்பில் தகவல் வெளியானதும், இஸ்ரேல் அரசின் முதன்மை விஞ்ஞானியான Shmuel Shapira காட்டமாக விமர்சித்துள்ளதுடன், இது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு ஒப்பானது என சாடியுள்ளார்.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!