மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு!

மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
அதன்படி, தற்போது 60, 61 மற்றும் 62 வயதுடைய மருத்துவர்கள் முறையே 61, 62 மற்றும் 63 வயது வரை பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.அத்துடன் 59 வயதுடைய வைத்தியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!