முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் அலிசார் மௌலாவை தனியார் சர்வதேச பாடசாலை ஒன்றில் கடமையாற்றிவரும் 46 ஆசிரியருக்குரிய ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு செலுத்தவேண்டிய 66 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிய பணத்தை செலுத்த தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறைத்தண்டனை விதி்த்தும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்னவர் சதாத வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.இவ் வழக்கு விசாரணை நேற்று (20.10.2022) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முன்னாள் அமைச்சரினால் நடத்தப்படும் சர்வதேச பாடசாலை

முன்னாள் அமைச்சர் அலிசார் மௌலானவினால் நடத்திவரும் சர்வதேச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2022 வரையில் ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 66 இலச்சத்து 54 ஆயிரத்து 779 ரூபா 40 சதம் செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தவில்லை என மட்டக்களப்பு தொழில் திணைக்களத்தினால் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப் பாடசாலையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் அலிசார் மௌலான மற்றும் பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்த அவரது உறவினர் உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தொழில் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணை நேற்று நீதிமன்ற பதில் நீதவானும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்னவர் சதாத் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது நீதவான் குறித்த தொகையை நேற்றைய தினம் செலுத்துமாறும் அதனை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். 


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!