இலங்கை எப்போது வழமை நிலையை அடையும்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போராட்டம் என்ற போர்வையில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அரசியல் அதிகாரத்தைப் பெற சில குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
.
பொருளாதார முன்னேற்றம்

அவ்வாறு முயற்சிக்கும் குழுக்களுக்கு வேண்டுமானால் வாக்குமூலம் அளித்து நாட்டின் முன்னேற்றத்தில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது நோக்கமாக உள்ளதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

மேலும் அந்த நோக்கத்திற்கு பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “2048 இளைஞர் மேடையில் அபிவிருத்தியடைந்த மாநிலத்திற்கான பயணம்” நிகழ்ச்சித்திட்டத்தில் இளைஞர்களுடன் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!