பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

டி20 உலகக்கோப்பையில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்திய அணியில் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், “இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றது! சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள். குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்திய அற்புதமான இன்னிங்சிற்காக விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் போட்டிகளுக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!