நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் புடினின் உடல்நிலை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் தற்போது மொத்த குடும்பமும் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தினரின் கடும் நிர்பந்தம் காரணமாக வார இறுதியில் மருத்துவ சோதனைக்கு உட்பட்டதாகவும் கூறப்படுகிறது. உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று, விளாடிமிர் புடின் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், சமீபத்திய மாதங்களில் மட்டும் அவர் சுமார் 9 கிலோ வரையில் உடல் எடை குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
    
மேலும், தொடர் இருமல் மற்றும் குமட்டல் காரணம், விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரங்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் விழாவில், இராணுவ வீரர்களுடன் அவர் காணப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியானது.

இதன் பின்னர் முன்னாள் ஆளுநர் ஒருவரை இணையம் ஊடாக சந்திக்கும் காணொளி தான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது சில சந்திப்புகள் அனைத்தும் முன்னர் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் என்றே கூறுகின்றனர்.

திங்கட்கிழமை துணைப் பிரதமர் டிமிட்ரியுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பின் போது ஜனாதிபதி புடின் தொடர்ந்து இருமியது காணொளியில் பதிவாகியிருந்தது.

புடின், அவரது உறவினர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் ஜனாதிபதியின் இருமல் குறித்தும், அத்துடன் குமட்டல் மற்றும் பசியின்மை பற்றியும் கவலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புடினின் மோசமாகும் உடல் நிலை தொடர்பில் வெளியான தகவல் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!