பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் வெளிப்படுத்தியுள்ள மூன்று முன்னுரிமைகள்!

பிரித்தானியாவில் அடுத்து ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் முன்னணியில் இருந்த தொழிலாளர் கட்சியின் கனவுகளுக்கு ரிஷி சுனக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட 27 புள்ளிகள் வெற்றி வாய்ப்பு அதிகம் பெற்றிருந்த தொழிலாளர் கட்சி, ரிஷி சுனக் பிரதமர் பொறுப்புக்கு வந்த ஒரே வாரத்தில் 11 புள்ளிகளை இழந்துள்ளது.

மட்டுமின்றி, பிரதமராக தமது முதன்மையான மூன்று முன்னுரிமைகள் குறித்தும் ரிஷி சுனக் வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் அதிகரித்துள்ள குற்றவியல் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது, NHS மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது.
இந்த மூன்றும் தற்போதைய தமது முன்னுரிமை என ரிஷி சுனக் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி மீதான ஆதரவு 5 புள்ளிகள் அதிகரித்து 28 புள்ளிகளாக உள்ளது. அதே வேளை தொழிலாளர் கட்சி 6 புள்ளிகளை இழந்து 44 புள்ளிகளுடன் உள்ளது.

ரிஷி சுனக் தலைமையில் பொருளாதாரத்தை திறம்பட நிர்வகிப்பார்கள் என்பதால் 33% பிரித்தானியர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், கசப்பான முடிவுகள் முன்னெடுக்கப்பட உள்ளது, கொரோனா காலகட்டத்தில் எனது பணியை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதனால் எனது தலமையிலான ஆட்சியை நம்பலாம் என ரிஷி சுனக் வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், NHS அமைப்பை வலுப்படுத்துவதே தமது இரண்டாவது முன்னுரிமை என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், கொரோனா பரவலுக்கு பின்னர் அதன் தேவை அதிகரித்துள்ளது என்றார். மூன்றாவதாக காவல்துறைக்கு முன்னுரிமை அளிக்க இருப்பதாகவும் அதிக காவலர்களை களத்தில் செயலாற்ற அனுப்ப இருப்பதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!