வெளிநாட்டவருடன் திருமணம்: சுற்றறிக்கையில் இருக்கும் தடைகளை நீக்கமாறு பணிப்புரை

இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் இருக்கும் தடைகளை நீக்கமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிப்பாளர் நாகத்திற்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்து செய்யப்படும் சுற்றறிக்கை

இது போன்ற இடையூறுகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடன் இரத்து செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆணடு 18ஆம் இலக்க சுற்றறிக்கை மூலம் இந்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டடுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்த்தின் போது பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். 

தடைகள்

இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும், வெளிநாட்டவர்கள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கையை’ பெற, தனது நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஆறு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த சான்றிதழின் அடிப்படையில், பதிவாளர் நாயகம், திருமணத்தை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவார் என்று இலங்கை அரசாங்கத்தின் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச் சுற்றறிக்கை முற்றிலும் பாரபட்சமானது மற்றும் விருப்பமானவரை சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளும் உலகளாவிய மனித உரிமைக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் விமர்சனங்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!