நேர மாற்றத்தை அமுல்படுத்தவிருக்கும் கனேடிய மாகாணம்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்ற்ம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.

குறித்த தினம் ஒரு மணித்தியாலம் பின்னால் நகர்த்தப்பட உள்ளது. அன்றைய தினம் றொரன்டோவில் மாலை 5.02 மணிக்கு சூரியன் அஸ்தமிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் மிக குறுகிய நாளாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி கருதப்படுகின்றது,

அன்றைய தினம் சூரியன் மாலை 4.44 மணிக்கு அஸ்தமிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் எதிர்வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர மாற்றத்தை மாற்றியமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேர மாற்றம் அமுல்படுத்தப்படுவதனால் மக்களின் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!