எலான் மஸ்க் நடவடிக்கை: டுவிட்டர் நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் தொடக்கம்

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் வாங்கினார். அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 7,500 பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி பணியாளர்கள் நீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கி உள்ளார். இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!