அவுஸ்திரேலியாவில் இருந்து தப்பி ஓடிய இந்திய கொலையாளி!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இந்தியர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சுமார் 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படும் என அவுஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 21ம் திகதி குயின்ஸ்லாந்தின் கெய்ர்ன்ஸுக்கு(Cairns) வடக்கே 40 கிமீ தொலைவில் உள்ள வாங்கெட்டி கடற்கரையில்(Wangetti Beach) 24 வயது மதிக்கத்தக்க தோயா கார்டிங்லி தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் Innisfail இல் செவிலியராக பணிபுரிந்த 38 வயதான இந்தியர் ராஜ்விந்தர் சிங் (Rajwinder Singh) முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார், ஆனால் தோயா கார்டிங்லி (Toyah Cordingley)கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு தனது வேலை, மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருந்து தப்பிச் சென்ற ராஜ்விந்தர் சிங் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு குயின்ஸ்லாந்து காவல்துறை இதுவரை வழங்கியதில் இல்லாத அளவுக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (USD 633,000) பணத்தை வெகுமதியாக வழங்கும் என அறிவித்துள்ளது.

மேலும் சிங் பஞ்சாப் மாநிலம் பட்டர் கலனை சேர்ந்தவர் என்றும், ராஜ்விந்தர் சிங் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை பகிரக்கூடியவர்கள் அவுஸ்திரேலியாவிலும் வெளிநாடுகளிலும் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம், எனவே இது நீங்கள் முன்வந்து தகவலை கூறுவதற்கான நேரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ராஜ்விந்தர் சிங்கை கைது செய்வதற்காக இந்தி மற்றும் பஞ்சாபி இரண்டும் பேசக்கூடிய காவல்துறை அதிகாரிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!