மக்களின் நலனை முதன்மைப்படுத்திய வரவு செலவுத் திட்டம்! நிதி இராஜாங்க அமைச்சர்

மக்களின் நலனை முதன்மைப்படுத்திய வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 70 வீதமான மக்கள் அரசாங்க்கத்திடம் நிவாரணங்களை கோரும் நிலையில், சுதந்திர இலங்கையின் 77ம் வரவு செலவுத் திட்டமானது சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவருக்கு வாழ்வதற்காக 13000 ரூபா தேவைப்படுவதாக அரசாங்க அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான ஓர் பின்னணியில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் சவாலை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!