சீனாவுக்கு ஈடுகொடுக்குமா இந்தியா?


பெரும் வல்­ல­ர­சாக உரு­வெ­டுத்­துள்ள சீனா­வின் வளர்ச்சி கண்டு இந்­தி­யா­வின் கவ­லை­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இந்­தியா தெற்­கா­சி­யா­வில் தன்­னை­யொரு வல்­ல­ர­சாக பாவனை செய்­கின்­ற­போ­தி­லும் சீனா­வுக்கு இணை­யாக அந்த நாட்­டைக் கூற­மு­டி­ய­வில்லை.

இன்­றைய உலக அரங்­கில், முக்­கிய துறை­க­ளில் உல­கின் முத­லா­வது இடத்தை அமெ­ரிக்கா கொண்­டி­ருக்­கின்­றது. அதற்­குப் போட்­டி­யாக சீனா வளர்ந்து வரு­கின்­றது. பொரு­ளா­தார பலத்­தில் அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்த இடத்­தைச் சீனாவே வகிக்­கின்­றது.

இராணுவ பலத்­தி­லும் சீனா கணி­ச­மான அளவு முன்­னே­றி ­யுள்­ளது. உல­கி­லேயே அதிக எண்­ணிக்­கை­யான இராணுவச் சிப்பாய் களை அந்த நாடு கொண்­டுள்­ளது. உலக சனத்­தொ­கை­யில் சீனாவே முத­லி­டத்தை வகிக்­கின்­றது. இதற்கு அடுத்த இடத்­தில் இந்­தியா உள்­ளது.

சித­றிப்­போன ரஷ்ய கம்­யூ­னிச வல்­ல­ரசு

கொர்­பச்­சேவ் தலை­மைப் பொறுப்­பில் இருந்­த­போது, சோவி­யத் யூனி­ய­னில் இணைந்­தி­ருந்த நாடு­கள் சுதந்­தி­ரம் பெற்­றுத் தனி­நா­டு­க­ளா­கப் பிரிந்து சென்­ற­தன் பின்­னர் ரஷ்யா மட்­டுமே எஞ்சி நிற்­கின்­றது.

ஒரு காலத்­தில் கம்­யூ­னி­சத்­தின் ஊற்­றுக் கண்­ணா­கத் திகழ்ந்த ரஷ்­யா­வில் இன்று கம்­யூ­னி­சத் தத்­து­வங்­கள் செல்­லாக் காசா­கி­விட்­டன. ஓர­ளவு ஜன­நா­யக முறை­மை­யும் அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்டு விட்­டது. அரச தலை­வரை, மக்­கள் தேர்­தல் மூல­மா­கத் தெரிவு செய்­கின்ற வாய்ப்பு அங்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வி­லும் கலப்பு முறை­யி­லான பொரு­ளா­தார முறைமை கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இத­னால் பொரு­ளா­தா­ரத்­தில் பெரு­வ­ளர்ச்சி அடை­வ­தற்கு அந்த நாட்­டி­னால் முடிந்­துள்­ளது.

இன்­ன­மும் சில ஆண்­டு­க­ளில் அமெ­ரிக்­காவை விஞ்­சி­வி­டக்­கூ­டிய ஆற்­ற­லைச் சீனா பெற்­று­வி­டு­மென்று கூறப்­ப­டு­கின்­றது. இது அமெ­ரிக்­கா­வுக்கு கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தவே செய்­யும். ஆனா­னப்­பட்ட அமெ­ரிக்­காவே சீனா­வின் வளர்ச்சி கண்டு அஞ்­சும்போது இந்­தி­யா­வி­னால் கவ­லைப்­ப­டா­மல் இருக்க முடி­யாது.

அண்டை நாடு­க­ளு­டன் இந்­தி­யா­வுக்­குச் சுமு­க­மான நல்­லு­றவு நில­வ­வில்லை

இந்­தி­யா­வின் அண்டை நாடு­கள் அந்த நாட்­டு­டன் சுமு­க­மான உற­வைக் கடைப்­பி­டிப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இந்­தி­யா­வி­லி­ருந்து பிரிந்து சென்று தனி நாடாக உரு­வா­கிய பாகிஸ்­தான் இன்று இந்தி யாவின் பரம எதி­ரி­யா­கத் திகழ்­கின்­றது.

இந்­தி­யா­வுக்கு எதி­ரா­கப் பயங்­க­ர­வா­தத்­தைத் தூண்டி விடு­வதே பாகிஸ்­தா­னின் வேலை­யா­கப் போய்­விட்­டது.

இந்­தியா தனது பாது­காப்­புத் தொடர்­பாக கவ­லைப்­ப­டு­வ­தற்கு பாகிஸ்­தா­னின் நட­வ­டிக்­கை­களே முதன்மைக் கார­ண­மா­கும். மத ரீதி­யான பூசல் கார­ண­மாக அந்­நி­ய­ரின் ஆட்­சிக் காலத்­தி­லேயே முஸ்­லிம்­க­ளும், இந்­துக்­க­ளும் இந்­தி­யா­வில் எதி­ரி­கள் போன்று செயற்­பட்­ட­னர்.

இதில் சிறு­பான்­மை­ யி­ன­ராக இருந்த முஸ்­லிம்­களே அதி­க­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர். இதைக் கண்­டித்­த­தன் கார­ண­மாக இந்­திய நாட்­டுக்கு சுதந்­தி­ரம் பெற்­றுக் கொடுத்த மகாத்மா காந்தி இந்து வெறி­யன் ஒரு­வ­னால் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

பாகிஸ்­தான் தனி­நா­டாக உரு­வான பின்­ன­ரும் இந்­தப் பகை­யு­ணர்வு தொட­ரவே செய்­தது. இந்­தி­யா­வுக்­கும், பாகிஸ்­தா­னுக்­கு­மி­டையே போர்­கள் இடம்­பெற்­ற­போது சீனா, பாகிஸ்­தா­னுக்­குத் தனது ஆத­ர­வைத் தெரி­வித்து வந்­துள்­ளது.

அந்த நாட்­டுக்கு மறை­மு­க­மாக ஆயுத உத­வி­க­ளை­யும் வழங்கி வந்­துள்­ளது. 1962 ஆம் ஆண்டு சீனா­வுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே இடம் பெற்ற போரில் சீனா­வுக்கு வெற்றி கிடைத்­தது. இந்­திய எல்­லை­யி­லுள்ள நிலத்­தின் கணி­ச­மான பகு­தி­யைச் சீனா தன்­வ­ச­மாக்­கிக் கொண்­டது.

இதை மீட்­ப­தற்கு இந்­தி­யா­வி­னால் முடி­ய­வில்லை.சீனா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு மாத்­தி­ரமே அந்த நாட்­டி­னால் முடிந்­து ள்­ளது. இந்த நிலை­யில் சீனா­வின் ஓர் அங்­குல நிலத்­தைக்­கூட எவ­ரா­வது அப­க­ரிப்­ப­தற்கு முற்­பட்­டால் அதற்­காக மிகக் கடு­மை­யான தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்டி நேரி­டு­மென சீனா அரச தலை­வர் கூறி­யமை இந்­தி­யா­வுக்­கான எச்சரிக்கை என்­பதை இல­கு­வா­கப் புரிந்து கொள்ள முடி­யும்.

இதை­விட சீனா­வின் பட்­டுப்­பா­தைத் திட்­ட­மும் இந்­தி­யா­வுக்கு எதி­ரா­னதே என்­ப­தில் சந்­தே­க­மில்லை. இதில் இலங்­கை­யை­யும் இணைத்­துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­க­ ளும் இடம்­பெற்று வரு­கின்­றன.

தென்­னா­சிய வட்­ட­கை­யில் இந்­தி­யா­வுக்­குச் சவா­லாக உரு­வெ­டுத்­துள்ள சீனா

ஏற்­க­னவே அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைத் தன்­வ­ச­மாக்­கிக் கொண்ட சீனா, கொழும்­புத் துறை­முக நகர்த்­திட்­டத்­தை­யும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இவற்­றை­விட பெரு­ம­ளவு கடன் தொகையை வழங்கி இலங்­கையை நிரந்­த­ரக் கட­னாளி நாடாக்­கி­விட்­டது.

காலப் போக்­கில் ராஜ­தந்­திர மட்­டத்­தில் இந்­தி­யா­வி­ட­மி­ருந்து இலங்கை தூரச் செல்வதற்கான வாய்ப்­புக்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன. இது இந்­தி­ யா­வுக்­குப் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

சீனா­வின் அதிபர் ஜின்பிங் ஆயுட்­கா­லம்­வரை அந்­தப் பத­வி­யில் தொட­ரு­வ­தற்­கான வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூல­மாக சீனா­வின் கொள்­கை­களை அவ­ரால் தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்கு முடி­யும். ஆனால் இந்­தி­யா­வில் அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை.

அர­சுக்­குத் தலைமை தாங்­கு­ப­வர்­கள், மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்­ற­னர். இத­னால் இந்­தி­யா­வின் அயலுறவுக் கொள்­கை­க­ளி­லும் காலத்துக்குக் காலம் மாற்­றங்­கள் ஏற்­ப­டு­கின்­றன.

சீனா­வுக்­குச் சொந்­த­மான உலங்கு வானூர்த்­தி­கள் இந்­திய எல்­லைக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­தாக இந்­தியா குற்­றம் சாட்­டு­கின்­றது. ஆனால் சீனா இதை­யொரு பெரிய விட­ய­மாக எடுத்­துக் கொள்­ள­வில்லை.

சில­வேளை இந்­தி­யா­வைச் சீண்­டு­கின்­ற­தொரு முயற்­சி­யா­க­வும் இது இருக்­க­லாம். இந்­தி­யா­வும் தொடர்ந்து பொறு­மை­யைக் கடைப்­பி­டிக்­கு­மென எதிர்­பார்க்க முடி­யாது. இறு­தி­யில் சீன – இந்­தி­யப் போர் மூண்­டா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.

இந்­தியா கூடப் பொரு­ளா­தா­ரத்­தில் குறிப்­பி­டத்­தக்க அள­வில் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்­றது. தொழில்­நுட்­பத் துறை­யில் அதன் வளர்ச்சி அப­ரி­மி­த­மா­னது. ஆனால் மக்­கள் தொகைப் பெருக்­கம் அந்த நாட்­டுக்­குப் பெரும் பிரச்­சி­னை­யா­கக் காணப்­ப­டு­கின்­றது.

எது எவ்­வாறு இருந்த போதி­லும் சீனாவை எதிர்த்து நிற்­கக் கூடிய வல்­லமை இந்­தி­யா­வுக்­குக் கிடை­யாது என்­பதை ஒப்­புக் கொள்­ளத்­தான் வேண்­டும். – Source: uthayan