300 உயிர்களை பலிகொண்ட ராட்சத முதலை தொடர்பில் நீடிக்கும் மர்மம்!

புருண்டியில் 300 உயிர்களை பலிகொண்ட ராட்சத முதலையின் இருப்பில் 30 ஆண்டுகளாக சந்தேகம் நீடிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆப்பிரிக்க நாடான புருண்டியில் உள்ள டாங்கனிகா ஏரிக்கு அருகில் ராட்சத முதலை ஒன்று, மனிதர்கள் உட்பட 300க்கும் அதிகமான உயிர்களை வேட்டையாடுவதாக அச்சம் நிலவுகிறது. குஸ்டாவ் என்று அழைக்கப்படும் 20 அடி நீளமுள்ள அந்த முதலை, டாங்கனிகா ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பல ஆண்டுகளாக பயமுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
    
சுமார் ஒரு டன் எடையுள்ளதாக கருதப்படும் அந்த முதலையின் வயது நூறு இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1987ஆம் ஆண்டுக்கு முன்பில் இருந்து இந்த முதலை மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக National Geographic-யின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலையை வேட்டைக்காரர்கள் கொல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தாலும், மூன்று துப்பாக்கி குண்டு காயங்களை அது பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இன்று வரை குறித்த முதலையை பிடிக்கும் அல்லது கொல்லும் முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக புத்திசாலித்தனமாக தப்பிம் ராட்சத முதலை, இன்னும் தளர்வாக இருக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கிடையில், 2019ஆம் ஆண்டு குறித்த முதலை கொல்லப்பட்டதாக ஒரு கூற்று இருந்தது. ஆனால் அதன் பின்னர் அது இறந்ததற்கான எந்த ஆதாரமும் வெளிவரவில்லை.
மர்ம உயிரினமாக கருதப்படும் ராட்சத முதலை இன்னும் ஆற்றில் பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!