கட்டுநாயக்க விமான நிலையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பசில்

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சர்ச்சை நிலை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பசில் ராஜபக்ஷவுக்கு, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மகத்தான வரவேற்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் எந்தவொரு பதவியையும் கொண்டிருக்காத பசில், விமான நிலையத்தின் அதிமுக்கிய நபர்கள் வெளியேறும் பகுதியால் வெளியேறியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையை பயன்படுத்திய பசில் ராஜபக்ஷ, அதற்கான கட்டணத்தையும் அவரை வரவேற்க வந்த விருந்தினர்ககளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை. அவரை வரவேற்க வந்தவர்களில் பெரும்பாலோர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் நிதஹஸ் சேவக சங்கமய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!