மெக்சிகோ- துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாஜா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் பிரிசாசுக்கு மேற்கு- தென்மேற்கில் சுமார் 30 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. 19 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. துருக்கியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்தான்புல் நகருக்கு கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6-1 ஆக பதிவானது. வீடுகள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் பக்ரெட்டின் கோகா கூறும்போது, “நிலநடுக்கத்தில் 22 பேர் காயம் அடைந்தனர். பீதியில் ஒருவர் கட்டிடத்தில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்துள்ளார்” என்றார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!