மறுக்கப்படும் வங்கி கடன்கள்: சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்

ஊடகவியலாளர்கள் மிகவும் கஷ்டத்துக்குள்ளான சூழ்நிலையில் உள்ள போது அவர்களுக்கு வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (28.11.2022) கருத்துரைக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்குவதாக கூறிய போதும் இந்த திட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதற்கமைய ஊடகவியலாளர்களுக்கு நிரந்தர வருமானம் என்பது கிடையாது. இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடியில் அவர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
இந்நிலையில் வங்கிக் கடன் பெறப்போகும் போதும் ஊடகவியலாளர்கள் பல தடைகளை சந்திக்கின்றனர்.

எனவே உலகளவில் எல்லா விடயங்களையும் மக்கள் மத்தியில் வெளிகொண்டு வரும் ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!