ஆட்சிக்காக சிங்கள மக்கள் மத்தியில் துவேசத்தை கிளப்பிவிட்டால்..! பிள்ளையான் விடுத்துள்ள எச்சரிக்கை

கடந்த காலங்களில் தமிழர்களிடம் ஒற்றுமையில்லை என்கிற பெரிய பிரச்சினையொன்று இருந்து வந்தது என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சுட்டிக்காட்டியுள்ளார்.  நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து பேசுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த வெளிப்படுத்தலும் இல்லை. நாங்கள் அதிகாரம், அதிகாரம் என்று சொல்கிறோம் ஆனால் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையை தக்க வைத்துக் கொண்டு 13 பிளஸ் சம்பந்தமாக பேசக்கூடிய ஒற்றுமைக்கு வந்தால் கூட மிக உதவியாக இருக்கும்.

இல்லையென்றால் நாங்கள் கட்சிகளுக்குள்ளே பிரிவினைகளையும், பிரச்சினைகளையும், அடுத்த தேர்தலுக்கான கருத்துக்களையும் முன்வைப்போம். 70 ஆண்டுகள் நீடிக்கின்ற இந்த பிரச்சினையிலே அரசியலுக்காக அல்லது ஆட்சியை பிடிப்பதற்காக வருகின்ற தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் துவேசத்தை கிளப்பிவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழுமே தவிர தீர்வு கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!