சிறுமிக்கு ‘ஜிகா வைரஸ்’ பாதிப்பு உறுதி- கண்காணிப்பு தீவிரம் December 13, 2022 9:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கர்நாடகாவில் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ‘ஜிகா வைரஸ்’ பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் கூறுகையில், “மாநிலத்தில் முதல் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி உள்ளது. இதனால் நிலைமையை அரசு கவனமாக கண்காணித்து வருகிறது. அதைக் கையாள எங்கள் துறை நன்கு தயாராக உள்ளது” என்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…