சுவிஸில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் தெரியுமா?

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் 39 சதவிகிதம்பேர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என தெரிவிக்கின்றன. அவர்களில் 31 சதவிதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள், 8 சதவிகிதம்பேர் சிறுவர்கள். 2012இலிருந்து 2021வரையிலான காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்து, 39 சதவிகிதமாகியுள்ளது.
    
2021இல், சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியினர் (63%) வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் (37%)சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

தகுதி இருந்தும் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினை மோசமான விடயம் என்னவென்றால், கல்வியும் மொழித்திறமையும் தகுதியும் இருந்தும், இந்த புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்களுக்கு வேலை கிடைக்கும் விடயத்தில் அதிக பிரச்சினை இருந்துள்ளது. சுவிஸ் நாட்டவர்களில் 3 சதவிகிதம் பேர் வேலையின்மையால் வாடும் நிலையில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் 8 சதவிகிதம் பேர் வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!