விஜயகலாவிடம் 3 மணி நேரம் விசாரணை

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று, உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

திட்டமிட்ட குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த சிறிலங்கா காவல்துறையினர், விஜயகலா மகேஸ்வரனிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தியதாக, சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரியான, மூத்த காவல்துறை மா அதிபர் எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவர் இராஜாங்க அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!