போரில் வெடிமருந்துகளை பயன்படுத்துவதை நீட்டிக்க விரும்பும் புடின்!

உக்ரைனை ஆதரிப்பதற்காக ஆயுத உற்பத்தியை மேம்படுத்த நட்பு நாடுகளை நேட்டோ தலைவர் வலியுறுத்துகிறார். புத்தாண்டு வார இறுதியில் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு நகரமான கெர்சனில் அதிகளவில் ஏவுகணை தாக்குதல்கள் காணப்பட்டன. தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களினால் சில பகுதிகளில் கொண்டாட்டங்கள் என்பது சாத்தியம் இல்லாமல் போனது.
    
இந்த நிலையில் புடின் உக்ரைனுக்கு எதிரான போரில் பெரிய அளவிலான வெடிமருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதை எதிர்பார்ப்பதாக நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘நேட்டோ கூட்டாளிகள் கீவ் அரசாங்கத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்க உதவ வேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த ஆயுதக் குவிப்புகளையும் பராமரிக்க வேண்டும். நமக்கு பீரங்கிகளுக்கான ஏராளமான வெடிமருந்துகள் தேவை.

நமக்கு உதிரி பாகங்கள் தேவை. அத்துடன் பராமரிப்பு தேவை. சமீபத்திய வாரங்களில் சண்டையில் உக்ரேனியர்கள் மேலாதிக்கத்தை அனுபவித்திருந்தாலும், ரஷ்யர்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ‘போரில் வெற்றி பெறும் வரை உக்ரேனியர்கள் போராடுவார்கள்’ என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!