“சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை” – இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து தங்களது நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோல, சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள், சீனாவில் இருந்து புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சான்று தேவைப்படும் என்று பிரிட்டன் கடந்த வாரம் கூறி இருந்தது.

    
ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம். கொரோனா உறுதியானால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று அறிக்கையின் மூலம் கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!