ஐ.மக்கள் சக்தியை தோற்கடிப்பதில் பிரதான தடை தேசிய மக்கள் சக்தி-வாசுதேவ நாணயக்கார

பிரதான வலதுசாரி கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை தோற்கடிக்க தேவையான கூட்டணியை உருவாக்குவதில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே பெரிய தடையாக இருப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதே ஏனைய கட்சிகளின் பிரதான நோக்கம். இதற்கு தேவையான பலத்தை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர லங்கா சபாகய மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள ஏனைய கட்சிகள் விரும்பினால், அந்த கட்சிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆணைக்குழுவிற்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய அந்த தீர்மானம் சரியானது எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!