ஜனாதிபதியை தேர்தல் ஆணைக்கு சந்தித்தது தவறு! – கண்காணிப்பு அமைப்புகள் விசனம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அழைத்து சந்தித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கரிசனையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளன.
    
ஜனாதிபதிக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு குறித்து பவ்ரல் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளதுடன் இது தேவையற்றது நெறிமுறையற்றது என தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தேர்தல்களை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை ஜனாதிபதி அவர்களை சந்திப்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது இடம்பெற்றிருக்க கூடாது தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மும்முரமாக உள்ள தருணத்தில் ஜனாதிபதி ஏன் அவர்களை சந்திக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆலோசனை வழங்கக்கூடாது தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமான அமைப்பு என்பதால் அதனுடன் கலந்தாய்வை மேற்கொள்வதற்கோ அதற்கு உத்தரவு வழங்குவதற்கோ ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழுவின் மீது செல்வாக்கு செலுத்த முயல்கின்றாரா என்ற பிழையான சமிக்ஞையை வழங்குகின்றது அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!