வலுக்கும் எதிர்ப்புகள்: ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட வரிகளை புறக்கணித்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் திடீரென வெளியேறினார்.
    
ஆளுநரின் இந்த செயல்பாடுகளை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆளுநருக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!