பிரான்ஸை எச்சரித்த புடின் ஆதரவாளர்கள்!

ரஷ்யா உக்ரைன் போரில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதையடுத்து, பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என புடின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
    
புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர், மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கிவருகிறார், ஆகவே, , முன்கூட்டியே பிரான்சைத் தாக்குவோம் என்று கூறியுள்ளார்.
அதேவேளை , பிரான்ஸ் நாடே இருக்கக்கூடாது என்று கூறியுள்ள ஓய்வு பெற்ற ரஷ்ய தளபதியான Andrey Gurulyov என்பவர், பிரான்சையோ அல்லது பிரித்தானியாவையோ அழிக்கும் அளவுக்கு தங்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். முன்பு பிரான்ஸ் என்று ஒரு நாடு இருந்தது, இப்போது அது இல்லை என்று கூறும் நிலை உருவானால் எப்படி இருக்கும் என்றும் Andrey Gurulyov கூறியுள்ளராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!