மாசுபட்ட இந்திய நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம்!

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில் 2022 ஆம் ஆண்டில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகளின் படி 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. டெல்லியில் பாதுகாப்பான வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக PM 2.5 (Particulate Matter) மாசு மற்றும் மூன்றாவது அதிகபட்ச சராசரியாக PM10 வகை மாசுக்கள் உள்ளது.
    
தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் (NCAP-National Clean Air Program) அறிக்கையில் தேசிய தலைநகரான டெல்லியில் PM2.5 (Particulate Matter) மாசு நான்கு ஆண்டுகளில் 7 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது, 2019 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 108 மைக்ரோகிராமில் இருந்து 2022 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 99.71 மைக்ரோகிராமாக குறைந்துள்ளது என்று கூறுகிறது.

தேசிய தூய்மை காற்றுத் திட்டம் (NCAP) என்பது 2019 இல் தொடங்கப்பட்ட 122 நகரங்களில் சிறந்த காற்றின் தரத்தை கண்காணிப்பதற்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாகும். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலின் படி, ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் இரண்டாவது இடத்தையும், உ.பி.யின் காசியாபாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. பீகாரின் பாட்னா மற்றும் முசாபர்பூர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களிலும், உ.பி.யின் நொய்டா மற்றும் மீரட் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!