ஸ்கார்லெட் காய்ச்சலால் அவதிப்படும் பிரித்தானியா!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக ஸ்கார்லெட் காய்ச்சலை பதிவு செய்துள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் ஸ்கார்லெட் காய்ச்சல் அதிகரிப்புக்கு முதன்மை காரணம் கொரோனா ஊரடங்கு என்றே நிபுணர் ஒருவர் பதிவு செய்துள்ளார். UKHSA அமைப்பு தெரிவிக்கையில், 2022ல் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 54,430 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    
இது கடந்த ஆண்டை விடவும் 20 மடங்கு அதிக எண்ணிக்கை என குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி 1953 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகமான எண்ணிக்கை எனவும் கூறுகின்றனர்.
டிசம்பர் 18ம் திகதியுடன் முடிவடையும் அந்த வாரத்தில் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு 9,482 பேர்கள் இலக்காகியுள்ளனர். இந்த ஆண்டிலும் எண்ணிக்கை சரிவடையவில்லை எனவும், கடந்த சில வாரங்களில் மட்டும் 5 மடங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவே பதிவாகியுள்ளது.

வடமேற்கு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி எனவும், டிசம்பரில் 3,000 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன. மேலும், 109 உள்ளூர் நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் நான்கு வாரங்களில் ஒருவருக்கு கூட ஸ்கார்லெட் காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யவில்லை.

இதனிடையே சிறார்களை அதிக பாதிக்கும் Strep A தொற்று தொடர்பில் டிசம்பர் மாதத்தில் இருந்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஸ்கார்லெட் காய்ச்சல் ஸ்ட்ரெப் ஏ தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. பிரித்தானியா முழுவதும் இதுவரை 38 சிறார்கள் Strep A தொற்று தொடர்பில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!