இறக்கும் தருவாயிலும் புடின் போட்டுள்ள மோசமான திட்டம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் மோசமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான தனது போர் தாக்குதலின் மூலம் முடிந்தவரை மக்கள் பலரை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று புடின் முயற்சிக்கிறார் என கிரெம்ளின் உள்நபர்(insider) ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி 11வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    
இந்த 11 மாத கால போர் நடவடிக்கைகளுக்கு நடுவே பல்வேறு தகவல்கள் ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து பரபரப்பாக வெளி வந்து கொண்டு இருக்கின்றன. தி சன் செய்தி அறிக்கைகளின் படி, புடின் கணைய புற்றுநோய் மற்றும் ஆரம்ப நிலை பார்கின்சன் நோய் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் தீவிர நோய்வாய்ப்பட்ட ஜனாதிபதி புடின், மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்று பல ஆதாரங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கிரெம்ளின் உள்நபர்(insider) ஒருவர் டெலிகிராம் சேனலான ஜெனரல் எஸ்.வி.ஆரிடம் பேசிய போது, ஜனாதிபதி விளாடிமிர் புடின் அணு ஆயுதப் போரை துண்டலாம் என்று எச்சரித்துள்ளார். அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி கடுமையான நோய்க்கான மருத்துவ சிகிச்சையில் இருப்பதால், அவர் “பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் பசியின்மை” ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “சீரற்ற மனநலம் கொண்ட ஒரு தீவிர நோய்வாய்ப்பட்ட மனிதனின் தலையில் இப்போது போர் உள்ளது, அவர் ஒரு புராண ‘சொர்க்கத்திற்கு’ தன்னுடன் முடிந்தவரை பலரை அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த மாத தொடக்கத்தில் உக்ரைனின் உளவுத் தலைவர், புடின் புற்றுநோயால் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேடப்படும் போர் குற்றவாளி இகோர் கிர்கின் ரஷ்ய தலைவர் ஒரு பாரிய உள்நாட்டுப் போரில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று கணித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!