பிரான்சில் சிறார்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பழக்கம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உடல்நலத்துக்குத் தீங்கான போதைப்பொருள் பழக்கம் ஒன்று சிறார்களிடையே பரவி வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Nitrous Oxide எனப்படும் வாயு தற்போது அதிகளவில் உட்கொள்ளப்படும் பொருளாக மாறி வருகிறது. மன அழுத்தத்தைப் போக்கும், அமைதியை உண்டாக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் இந்த Nitrous Oxide, தற்போது சிறுவர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
    
குறித்த Nitrous Oxide வாயு உடல்நலத்துத்துக்கு தீங்கானது எனவும், அதிக பயன்பாடு அதன் மீதான அடிமைத் தனத்தை ஏற்படுத்தக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விரைவில் இந்த Nitrous Oxide வாயுக் குடுவைகள் சிறார்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Nitrous Oxide வாயு தொடர்பாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தும்படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் குடியிருப்பு ஒன்றில் இருந்து சுமார் 2.75 மில்லியன் யூரோ பெருமதியான Nitrous Oxide வாயுக் குடுவைகளை பொலிசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!