வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின்னரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியும்! மகிந்த தேசப்பிரிய

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு, உரிய அதிகாரம் உடைய நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என்பனவற்றுக்கு இவ்வாறு தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தின் பின் விசேட நிலைமைகள் ஏற்பட்டால் தேர்தல் சட்டத்தின் 38/3 சரத்தின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளும்ன்றம் என்பனவற்றுக்கு தேர்தலை ஒத்தி வைக்கும் தீர்மானம் எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 38/3 சரத்தின் பிரகாரம் கோவிட் காலத்தில் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஒத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!