யாழ். மாநகர புதிய முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு

யாழ். மாநகரசபையின் புதிய முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் பதவியேற்றுள்ளார். 
அவர் இன்று (21.01.2023) மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.  யாழ். மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட தெரிவின் மூலம் முன்மொழியப்பட்டபடி, இ.ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியானது. அதனையடுத்து இன்றைய தினம் ஆர்னோல்ட் முதல்வர் பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!