உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த ஈரான்!

உலக மக்கள் தொகை ஆய்வு அறிக்கையின் படி உலகின் பழமையான நாடுகளின் வரிசையில் இந்தியா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் திகதிகளை அடிப்படையாக கொண்டு உலகின் மிக பழமையான நாடு எதுவென்று உலக மக்கள் தொகை ஆய்வு(WPR) பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
    
அந்த வகையில் இந்தியாவில் ஆரம்ப கால அரசாங்கம் கி மு 2000 இல் நிறுவப்பட்டது. இதன் மூலம் இந்தியா உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. ஈரானில் ஆரம்பகால அரசாங்கம் கிமு 3200 இல் நிறுவப்பட்டது, இதன்மூலம் ஈரான் உலகின் பழமையான நாடுகளின் பட்டியலில் 1வது இடத்தை பிடித்துள்ளது என (WPR) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1. ஈரான் – 3200 கி.மு
2. எகிப்து – 3100 கி.மு
3. வியட்நாம் – 2879 கி.மு
4. ஆர்மீனியா – 2492 கி.மு
5. வட கொரியா – 2333 கி.மு
6. சீனா – 2070 கி.மு
7. இந்தியா – 2000 கி.மு
8. ஜார்ஜியா – 1300 கி.மு
9. இஸ்ரேல் – 1300 கி.மு
10. சூடான் – 1070 கி.மு11. ஆப்கானிஸ்தான் – 678 கி.மு

சுய இறையாண்மை திகதியின் அடிப்படை

இதற்கிடையில், சுய-இறையாண்மை தேதியின் அடிப்படையில், ஜப்பான் உலகின் மிகப் பழமையான நாடாகும், அதைத் தொடர்ந்து சீனா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் உள்ளன.
வேறுபட்ட அளவுகோலை பயன்படுத்தி, உலக மக்கள் தொகை மதிப்பாய்வு மூலம் சுய-இறையாண்மை திகதியின் படி பின்வரும் நாடுகள் உலகின் பழமையானவை என பட்டியலிடப்பட்டுள்ளன.

1. ஜப்பான் – 660 கி.மு
2. சீனா – 221 கி.மு
3. சான் மரினோ – 301 CE
4. பிரான்ஸ் – 843 CE
5. ஆஸ்திரியா – 976 CE
6. டென்மார்க் – 10 ஆம் நூற்றாண்டில் கி.பி
7. ஹங்கேரி – 1001 CE
8. போர்ச்சுகல் – 1143 CE
9. மங்கோலியா – 1206 CE10. தாய்லாந்து – 1238 CE

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!