“உலகின் உணவு பிரச்சனைக்கு இந்த இரு நாடுகள்தான் முக்கிய காரணம்” – அமெரிக்கா குற்றச்சாட்டு!

உலகின் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் முக்கிய காரணம் என்று அமெரிக்காவின் கருவூல செயலர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். செனகலில் உள்ள டாக்கரில் ஜனவரி 20ம் திகதி அன்று பெண்கள் மற்றும் இளைஞர் வணிக காப்பகத்தில் பெண் தொழில் முனைவோர்களின் வட்டமேசை கூட்டம் நடைபெற்றது.
    
இதில் அமெரிக்காவில் கருவூல செயலர் ஜேனட் யெலன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கை பல பிரச்சனைகளை உலக அளவில் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்,

அத்துடன் சீனாவின் கடன் கொள்கைகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கடிக்குள் இழுப்பதாகவும் அவர் விமர்சனம் செய்து இருந்தார்.

ஆப்பிரிக்காவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகளுக்கு சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகள் தான் காரணம் கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சாட்டினார்.

அத்துடன் ரஷ்யாவின் போர் தாக்குதல் மற்றும் உணவு ஆயுதமாக்குதல் நடவடிக்கைகள் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகப்படுத்தியது மற்றும் சொல்ல முடியாத துன்பத்தை உலக நாடுகளுக்கு வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் தனி மனிதன் ஒருவரின் செயல்களால் உலகப் பொருளாதாரத்தில் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆப்பிரிக்காவில் தேவையற்ற பொருளாதார இழுவையை உருவாக்குகிறார் என்று ஜேனட் யெல்லன் குற்றம் சாட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!