தேர்தலை நடத்தும் விவகாரம் – கைவிரித்த மத்திய வங்கி ஆளுநர்!

இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதா? இல்லையா? என்பது மத்திய வங்கியுடன் தொடர்புடைய விடயம் அல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
    
“தேர்தலை நடத்துவது ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. அது எமக்கு சம்மந்தமில்லை. மத்திய வங்கியானது நாட்டின் நிதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிறுவனம். தேர்தல் எமது விடயத்துக்கு புறம்பானது. ” என்று அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!