சீன தூதரகத்தின் பெயரில் போலி கடிதம் – சிஐடி விசாரணை!

இலங்கைக்கான சீன தூதரகத்தின் கடிதம் என்ற பெயரில் வெளியான போலி கடிதம் குறித்து சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவு என தெரிவித்து சீன தூதரகத்தின் கடித தலைப்பினை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் குறித்தே சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிஐடியினர் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த போலி ஆவணம் குறித்து தனக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலெஸ் தெரிவித்துள்ளார்.
சீன தூதரக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என விரும்பினார்கள் நான் இது குறித்த விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் எக்சிம் வங்கியின் கடிதம் என தெரிவித்து கடிதமொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!